ஆகஸ்ட்-1 மஹய்-2 கோட்டத்தின் பல்வேறு பணித்தளங்களில்
தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மகளிர் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார்.
ஜூன் 29 அன்று மகத் காலனி
சபையில் நடைபெற்ற மகளிர் கூடுகையில் 55 பேர் பங்கேற்றனர்;. இக்கூடுகையில்,
சகோதரி ஜாய் ரூத்
புத்தகத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டதுடன், தனிவாழ்விற்கேற்ற பல்வேறு ஆலோசனைகளையும்
பகிர்ந்துகொண்டார். மகளிர் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும்
மகளிர் மூலமாக சமுதாயத்தில் மாற்றங்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-2 ஜூலை 3,4,5 ஆகிய தினங்கள், அர்வல் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாச கூடுகையில், முதல் இரண்டு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட விசுவாசிகளும், இறுதி நாளில் 243 விசுவாசிகளும் பங்கேற்றனர். சகோ. ராஜா மற்றும்சகோ. ஜின்னி குமார் ஆகியோர் ஆராதனையிலும், ஜெபத்திலும் ஜனங்களை வழிநடத்த, சகோ. ஜோ பால்சன் மற்றும் ராஜா ஆகியோர் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூடுகை, கலந்துகொண்ட அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. ராஜௌலி, ராஜ்கிர் மற்றும் பஹாட்பூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-3 PEACE -1 கோட்டத்தின், குரு பணித்தளத்தில் ஜூலை 8 அன்று
நடைபெற்ற எழுப்புதல் கூட்டம் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்தது.
இக்கூட்டத்தில் சகோதரர் பால் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். இந்தக்
கூட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட
விசுவாசிகள் கலந்துகொண்டு, தேவனுடைய
வார்த்தையைக் கேட்டு, கிறிஸ்துவுக்காக
வாழும் வாழ்க்கையில் நிலைத்திருக்க தங்களை அர்ப்பணித்தனர்;. தேவனுக்கே மகிமை! இப்பணித்தள விசுவாசிகள்
விசுவாசத்தில் பெலப்படவும், ஆத்தும ஆதாயப்
பணியில் உற்சாகமாகச் செயல்படவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-4 மஹய்-1 கோட்டத்தின் பேலாகஞ்ச் பணித்தளத்தில் ஜூலை 17 அன்று "எழும்புங்கள் இளைஞர்களே"
என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இளைஞர் எழுப்புதல் கூட்டத்தில் சுமார் 30 இளைஞர்கள் கலந்து கொண்டு, தேவனுடைய வார்த்தையின் மூலம் கிறிஸ்துவுக்காக
உறுதியாக நிற்கவும், மற்றவர்களுக்கு
முன்மாதிரியான வாழ்க்கை வாழவும் ஊக்குவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில், சகோதரர் வெண்ணிலவன் மற்றும் ஜெம்ஸ் இளைஞர்
ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு, பாடல்கள் மற்றும்
ஆராதனையுடன் தேவனுடைய வார்த்தையையும் பகிர்ந்துகொண்டனர். இளைஞர்கள் கர்த்தரில்
நிலைத்திருந்து, ஆவிக்குரிய
வளர்ச்சி பெற்று, தங்கள்
குடும்பங்களிலும், சபைகளிலும்,
சமுதாயத்திலும்
கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழ தேவன் அவர்களைப் பலப்படுத்தும்படி
ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-5 கிழக்கு
மண்டலத்தின் மூன்று கோட்டங்களிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட பிள்ளைகளைச் சந்திக்க கர்த்தர்
உதவி செய்தார். பணித்தளங்களில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் இந்த ஊழியங்கள்
நடைபெற்றன. தேவனுக்கு மகிமை உண்டாவதாக! "நேஎநச புiஎந ருp" என்ற தலைப்பின் கீழ், பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தையைப் போதித்து,
பாடல்களைக்
கற்றுக்கொடுத்து, மிஷனரிகளின்
உண்மை வாழ்க்கைச் சம்பவங்களைப் பகிர்ந்து வருகிறோம். தொடர்ந்து இந்தப்
பிள்ளைகளுக்காகவும், அவர்களுடைய
பெற்றோருக்காகவும், அவர்கள கர்த்தரை
அறிந்து இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-6 கிழக்கு
மண்டலத்தில் நடைபெற்றுவரும் மகளிர் ஊழியங்களுக்காகவும், மகளிர் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி,
ஜெப வாழ்க்கையில்
வளர்ந்து, தங்கள்
குடும்பங்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதமாகவும், கிறிஸ்துவின் சாட்சிகளாகவும் வாழ தேவன்
அவர்களைப் வழிநடத்தும்படியாகவும் ஜெபிப்போம்.
.jpg)