SEPTEMBER 2026

 



செப் 01 அக்பர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஊழியர்களுக்கான ஐக்கியக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூடுகையில்,சகோ.R.S.  ஜெயசீலன் மற்றும் சகோதரி ஜாய் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு, தேவவார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். ஊழியர்கள் தங்கள் ஊழியத்தில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு, ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் மற்றும் ஊழியங்களுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் மற்றும் ஊழியங்களுக்காகவும், ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட அவர்கள் செய்துமுடிக்கவும் ஜெபிப்போம். 

செப் 02 பாலுமாத் மற்றும் பன்சாரி பணித்தளங்களில், 'எழுந்து பிரகாசி" என்ற தலைப்பின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 170 விசுவாசிகள் பங்கேற்றனர். விளையாட்டுகள் மற்றும் பாடல்களுடன், தேவ செய்தியின் வாயிலாக பெண்கள் உற்சாகப்படுத்தப்பட்டு, குடும்பங்கள், சபைகள் மற்றும் சபைகளில் கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்க சவால் விடுக்கப்பட்டனர். இக்கூட்டங்களில் பங்கேற்றோர் சாட்சியாக வாழவும், சுற்றியுள்ள மக்களுக்கு கிறிஸ்துவை பிரதிபலிக்கவும், குடும்பங்கள், சபைகள் மற்றும் சமுதாயத்திற்கு ஆசீர்வாதமாக இருக்கவும் ஜெபிப்போம். 

செப் 03 கோடர்மா பணித்தளத்தின் ஜெம்ஸ் பள்ளி வளாகத்தில் டெலிமெடிசின் மையம் திறக்கப்பட்டது. சகோதரி ரீனா மற்றும் குழுவினர் முன்னிலையில் சகோ. ராகேஷ்குமார் ஜெபத்துடன் மையத்தைத் திறந்துவைத்தார்; 70 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த டெலிமெடிசின் யைத்தின் மூலம் அநேக மக்களுக்கு மருத்துவ உதவியுடன், கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஜெபிப்போம்.

செப் 04 ஆகஸ்ட் 12,13 மற்றும் 14 ஆகிய தினங்கள் மான்பூர் மற்றும் மர்தார்பூர் பணித்தளங்களிலும், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தினங்கள் ஜுரியா மற்றும் சத்ரா பணித்தளங்களிலும் 'எழுந்திரு இது உனக்கான நேரம்" 'வேரூன்றி வளருங்கள்" 'தப்பி ஓடி விலகுங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற வாலிபர் கூட்டங்களில் 380 வாலிபர்கள் பங்கேற்றனர். இவர்கள் தேவனுடைய வார்த்தையில் வளரவும், சாட்சிகளாக வாழவும் மற்றும்  கிழக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.

செப் 05 பத்தேபூர் பணித்தள ஊழியர் இல்லம் ஆகஸ்ட் 16 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது. சகோ. ராகேஷ் குமார் இல்லத்தைத் திறந்துவைத்து, தேவ வார்த்தையையும் பகிர்ந்துகொண்டார். டெக்காரி மற்றும் கிரிதிஹ் பணித்தளங்களில் விரைவில் ஊழியர் இல்லங்கள் கட்டப்படவும், ராஜ்கிர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் மகாத் காலனி, A.P. காலனி, நாளந்தா பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.