June 2025

                                                      கிழக்குமண்டலம்



⏲ ஏப்ரல் 26 அன்று கூடு பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 40 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி கிருபா பால்  மற்றும் சகோதரி சுஸ்மா சுயம்பர் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, வேத வசனங்கள் மற்றும் அனுபவச் சாட்சிகள் மூலமாக  பங்கேற்றோரை உற்சாகப்படுத்தி, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற ஆலோசனைகளையும் வழங்கினர். 

கர்த்தருடைய பெரிய கிருபையினால், Peace-1 கோட்டத்தின் மந்தர் மற்றும்  பாலுமாத் ஆகிய பணித்தளங்களில் ஜெம்ஸ் சிக்காரியா வாலிப ஊழியர்கள் மூலமாக வாலிபர் கூட்டங்கள் நடைபெற்றறன. பாடல்கள், குறுநாடகங்கள், விளையாட்டுப்போட்டிகளுடன்  வாவிபருக்கேற்ற தெளிவான தேவசெய்தியும் வழங்கப்பட்டது. பாவம் நிறைந்த உலகில் ஆண்டவரில் எப்படி நிலை நிற்க வேண்டும் என்றும், அவருக்காகக் கனி தந்து அநேகரை அவர் பக்கம் வழிநடத்தவும் வாலிபருக்குப் போதிக்கப்பட்டது. அவ்வாறே, பான்சாரி பணித்தளத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜெம்ஸ் பணித்தளத்தில் இரத்தசாட்சியாக மரித்த சகோதரர் மங்கள் பன்னா மற்றும் ஸ்தோவான் ஆகியோரது வாழ்க்கையின் தியாகமும் தைரியமும் கலந்துகொண்ட வாலிபர்களுக்குப் போதிக்கப்பட்டது. இக்கூட்டங்களில், 11 பேர் ஆண்டவருக்காக சேவைசெய்ய தங்களை அர்பணித்தனர்.

மே 7 மற்றும் 8 தேதிகளில் மகய்-1 கோட்ட ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம்  சேக்பூரா மாவத்தில் உள்ள கட்னிகோல் பணித்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில், சகோ.ராகேஷ் ரவி தேவ செய்தியளித்து ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து, சகோ. துரை மீடியா துறையை ஊழியர்கள் எவ்வாறு ஊழியத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று ஆலோசனை அளித்தார்.

மே மாதம் தொடக்கம் முதல், கிழக்கு மண்டலத்தின் பல்வேறு பணிகளிலும் மற்றும் கிராமங்களிலும் 15000 சிறுவர், சிறுமியர் மற்றும் மாணவர்களைச் சந்திக்கும் இலக்கோடு, விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் 'சந்தோஷமாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றன. இவ்வூழியங்களின் வாயிலாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார்.

கோடர்மா  பணித்தளத்தின் ஆங்கில வழிப் பள்ளியில், மே 12-ம் தேதி நடைபெற்ற மருத்துவ முகாம் மூலமாக ஜெம்ஸ் பள்ளியின் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விசுவாசிகள் 90 பேர் பயனடைந்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. சகோதரி ரீனா கோபோர்த் தலைமையில், சிக்காரியா ஜெம்ஸ் மருத்துவமனையின் குழுவினர் இந்த மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்; தேவனுக்கே மகிமை !    

லத்திகார் என்ற இடத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் கலந்துகொண்டனர். சகோ. பால் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தினார்;. கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. ஆண்டவருக்காக எழுந்து நிற்கவும் சாட்சியாக வாழவும் ஜனங்கள் தங்களை அர்ப்பணித்ததோடு, லத்திகார் மாவட்ட மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஊக்கமாக ஜெபித்தனர். இப்பணித்தளத்தில், ஆலயத்திற்கான இடம் வாங்கும் பணி விரைவில் முடிய ஜெபிப்போம்.