கிழக்குமண்டலம்
ஜுலை 02 மகய்-2 கோட்டத்தின் அக்பர்பூர் மற்றும் டோபி பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 105 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், குறுநாடகங்கள், வேத வினா போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, வாலிப நாட்களில் தேவன் விரும்பும் வாழ்க்கை வாழ்வது எப்படி? என்ற கருப்பொருளின் கீழ் அளிக்கப்பட்ட தேவசெய்திக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அர்ப்பணித்தவர்கள் வரும் நாட்களில் ஆண்டவருக்கு சாட்சிகளாக வாழ ஜெபிப்போம்.
ஜுலை 03 காக்கோ பணித்தளத்தில் ஜுன் 1 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமின் வாயிலாக 70 பேர் பயனடைந்தனர். வரும் நாட்களில் பல்வேறு பணித்தளங்களில் இதுபோன்று நடைபெறவிருக்கும் மருத்துவ முகாம்களுக்காகவும், வருகை தரும் மக்கள் கிறிஸ்துவின் அன்பையும் அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜுலை 04 'சந்தோஷமாயிருங்கள்"என்ற தலைப்பின் கீழ், பணித்தள ஆலயங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களை நடத்தவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்காகவும் மற்றும் அவர்களது பெற்றோர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜுலை 05 PEACE 1 கோட்டத்தின் ஹால்திகோட்சா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 35 சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சகோதரி ஷப்னம் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜெபத்திலும் வழிநடத்தினார். பெண்கள் மூலமாக பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் பணித்தள பெண்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
ஜுலை 06 ராஜ்கீர் மற்றும் ராஜொலி பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமான பணிகள் தொடங்கப்படவும் மற்றும் பணித்தள ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம். ஜெபியுங்கள்.