SEP 2025

                                   கிழக்குமண்டலம்


செப்டம்பர் 01 மகாய் 2 கோட்டத்தின் மாவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 15 பேர் கலந்துக்கொண்டனர். சகோதரி ஜாஸ்மின் ஜெயசீலன், எபிரெயர் 12:1 வசனத்தினை மையமாகக் கொண்டு தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, சகோதரி லவ்லி  மூலமாக பெண்களின் வாழ்க்கைக்கடுத்த சுகாதார விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. பணித்தள பெண்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், பெண்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவண்டைத் திரும்பவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 02 ஆகஸ்ட் 1 அன்று ரஜோலி பணித்தளத்தில் உபவாசக் கூடுகை நடைபெற்றது; 40 பேர் பங்கேற்று தேசத்திற்காகவும், தங்கள் பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் பாரத்தோடும் ஒருமனதோடும் தேவ சமூகத்தில் ஜெபித்தனர். இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட வாங்கப்பட்டுள்ள நிலத்தினைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மாறவும் மற்றும் ஆலயக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படவும் ஜெபிப்போம். ஆகஸ்ட் 3 அன்று படுக்காவ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் சகோ. சித்தார்த் கலந்துக்கொண்டு தேவ செய்தியளித்தார்; 40–திற்கும் மேற்பட்ட பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். இப்பணித்தளம் அமைந்துள்ள ஹஜாரிபாத் மாவட்டத்தில் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 03 கோடர்மா பணித்தளத்தில் சீஷத்துவப் பயிற்சியினை நிறைவுசெய்த 11 மாணவர்களுக்கு நடைபெற்ற சான்றளிப்பு நிகழ்ச்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சியினை நிறைவு செய்தவர்களில், மூன்று  மாணவர்கள் வேதாகம மேற்படிப்பிற்காக தர்பங்கா பணித்தளத்திற்குச் செல்லவிருக்கின்றனர். சீஷத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காகவும், சபையிலும் மற்றும் சமுதாயத்திலும் அவர்கள் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவும் மற்றும் சீஷத்துவப் பயிற்சியில் (னுவுஊ) இந்த வருடமும் அநேக வாலிபர்கள் இணைந்து பயிற்சி பெறவும்  ஜெபிப்போம்

செப்டம்பர் 04 கயா பணித்தளத்தில் ஜெம்ஸ் ஊழியர்கள் மற்றும் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை (GILEAD) ஆகஸ்ட் 20 அன்று தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார், சகோ. ப்ரெடி ஜோசப், Dr. விஜய்காந்த் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளுக்காகவும்,  பயிற்சிபெறும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம். மகய் 1 கோட்டத்தின் பிக்ரம் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 70 பேர் கலந்துக்கொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். சகோ. நந்தலால் தேவ செய்தியளித்து, ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். தேசத்திற்காகவும் மற்றும் எதிர்ப்புகள் நிறைந்த பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 05 ஆகஸ்ட் 14 அன்று பலித்தாத் பணித்தளத்தில் வாலிபர் கூடுகை நடைபெற்றது; 30 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர். 'கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்வது எப்படி' என்ற தலைப்பின்கீழ் சகோ. ராஜா தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.  கொடுத்தார். இதுபோன்ற கூட்டங்கள் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெற ஜெபிப்போம். லத்திகார் பணித்தளத்தில் 'GP என்ற கிராமத்தில் உள்ள அரசாங்கப் பள்ளியில் ஆகஸ்ட் 17 அன்று நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பாடல்கள் மற்றும் கதைகள் மூலமாக 50 சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.